சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் தொகை 27 ஆக பதிவாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சர்வதேச ரீதியில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,595 ஆக உயர்வடைந்துள்ளது. இது தொற்று நோய் தொடங்கியதிலிருந்து உலகளாவிய இறப்பு எண்ணிக்கையை 3,595 ஆகக் கொண்டு வந்துள்ளது.
சீனாவில் கொரோனவினால் இதுவரை 3,097 உயிரழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் சீனாவில் 99 புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 80,695 ஆக உயர்வடைந்துள்ளது.
சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோய்களின் எண்ணிக்கை இப்போது 80,696 ஆக உள்ளது, சனிக்கிழமை 99 அதிகரித்துள்ளது. அதன்படி சர்வதேச ரீதியில் இதுவரை கொரோனாவினால் 105,283 பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு வெளியே தற்போது 498 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இத்தாலி: 233
ஈரான்: 145
தென்கொரியா: 46
அமெரிக்கா: 19
பிரான்ஸ்: 16
ஜப்பான்: 13
ஸ்பெய்ன்: 10
ஈராக்: 4
ஹொங்கொங்: 2
பிரட்டன்: 2
அவுஸ்திரேலியா: 2
தாய்வான்: 1
தாய்லாந்து: 1
பிலிப்பைன்ஸ்: 1
சுவிட்சர்லாந்து: 1
ஆர்ஜன்டீனா: 1
நெதர்லாந்து: 1
No comments:
Post a Comment