கச்சதீவில் காணாமல் போன 10 படகுகளில் 7 மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 7, 2020

கச்சதீவில் காணாமல் போன 10 படகுகளில் 7 மீட்பு

கச்சதீவில் அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு சென்றவர்களின் படகுகள் காணாமல் போன நிலையில் தற்போது 7 படகுகள் மீட்கப்பட்டுள்ளது. 

கச்சத்தீவு திருவிழாவுக்காக சென்றவர்கள் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு ஆலய பிரார்த்தனையில் ஈடுபட்டதன் பின்னர் மீள திரும்புவதற்காக கடற்கரைக்கு வந்து படகுகளை பார்த்தபோது 10 படகுகள் காணாமல் போயிருந்தது. 

இதனையடுத்து 100 பேர் வரையில் நிர்கதிக்குள்ளாகியிருந்த நிலையில் கடற்படையினர் படகுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இதன்போது 7 படகுகள் மீட்கப்பட்டு சுமார் 70 பயணிகள் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எனினும் 3 படகுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏனைய படகுகளை கடற்படையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment