நைஜீரியாவில் ‘லாசா வைரஸ்’ - 144 பேர் பலி, 855 பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

நைஜீரியாவில் ‘லாசா வைரஸ்’ - 144 பேர் பலி, 855 பேர் பாதிப்பு

நைஜீரியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் பரவி வரும் லாசா காய்ச்சல் தாக்கி இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 600-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதைற்கிடையில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை ‘லாசா’ என்ற காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. லாசா காய்ச்சல் என்பது லாசா வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான ரத்தக்கசிவு நோயாகும்.

1969ஆம் ஆண்டு நைஜீரியாவின் லாசா நகரில் இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால் அதற்கு ‘‘லாசா காய்ச்சல்’’ என்று பெயரிடப்பட்டது. 

இந்த வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் 112 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நைஜீரியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் லாசா காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. 

எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து பரவும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இந்த ஆண்டு முதல் இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 855 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக நைஜீரியா மத்திய நோய்க்கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment