(ஆர்.விதுஷா)
பதினான்கு இலட்சதத்திற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை மிக சூட்சுபமான முறையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து வருகை தந்த EK - 650 என்ற விமான சேவையூடாக இன்று சனிக்கிழமை காலை 10.15 மணிக்கு இலங்கையை வந்தடைந்த இளைஞரே இவ்வாறான கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் நடத்தையில் சந்தேகித்த சுங்க அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் போது இந்த சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் 37 வயதுடைய குருணாகலை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து மிக சூட்சுபமான முறையில் மறைத்து கடத்தப்பட்ட 147 சிகரெட் பெட்டிகளிலிருந்து 29 ஆயிரத்து 400 சிகரெட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 14 இலட்சத்த 70 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment