தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று 25 மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களிலும் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பொலிஸ், கடற்படையின் ஒத்துழைப்புடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மழையுடனான காலநிலை இல்லாமையால் டெங்கு நோய் பரவும் வீதமும் குறைவடைந்துள்ளது.
என்றாலும் மழைக் காலங்களில் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஒரு வாரத்திற்கு இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment