யால தேசிய பூங்காவிற்கு வருகை தருவோருக்கு இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டு வழங்கும் முறையை வனஜீவராசிகள் திணைக்களம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு Online மூலம் நுழைவுச்சீட்டு வழங்கும் முறை இன்று (05) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வருகை தரும்போது ஏற்படும் நெரிசலை குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யால தேசிய பூங்காவிற்குள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும்போது ஏற்படும் நெரிசலைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சீ. சூரியபண்டார தெரிவித்தார்.
இதுவரை நுழைவாயிலில் மாத்திரம் விநியோகிக்கப்பட்டு வந்த நுழைவுச்சீட்டுகளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் இணையத்தளம் www.dwc.gov.lk ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment