சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2020

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பொகவந்தலாவை, பெட்ருசோ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (04) இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, இச்சந்தேகநபர்கள் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபர்கள் 48, 50 வயதுடைய பொகவந்தலாவையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment