சர்வதேச வர்த்தகத்தில் இடம்பெறக்கூடிய சவால்களை முறியடிக்கும் வகையில் தேசிய வர்த்தகக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கான ஆரம்பம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய வர்த்தக கொள்கைக்கான ஆரம்பத்தை விளக்கும் விசேட கண்காட்சி கொழும்பிலுள்ள தொழில் துறைசார்ந்தோரின் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
நாடு சுதந்திரமடைந்து 72 வருடங்கள் கடந்தபோதும் தேசிய வர்த்தகக் கொள்கையொன்று இல்லாமையால் கடந்த வருடம் இவ்விடயம் அதிகம் விவாதத்துக்கு உள்ளானதாகவும் இதன்போது தொழில்துறைசார்ந்தோரின் தேசிய ஒன்றியம் சுட்டிக்காட்டியது.
தேசிய வர்த்தக கொள்கை அமுலில் இருக்குமாயின் பல வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள முடிவதுடன் சவால்களை முறியடிக்க முடியுமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
No comments:
Post a Comment