அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணம் எதிர்பார்த்தபடி பொதுமக்களுக்கு கிடைத்துள்ளதா? என்பது தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்காக நுகர்வோர் அதிகார சபையின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விகிதம் 15 சத வீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது.
பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்காக பதிவு செய்யப்பட வேண்டிய வரையறை காலாண்டுக்கு 75 மில்லியன் அல்லது வருடத்தில் 300 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்பவதற்கான 2 சத வீத வரி கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் இரத்து செய்யப்பட்டது.
பொருளாதார சேவைக்கான கட்டணம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டது. இவற்றுக்கு மேலாக மேலும் பல விரி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment