பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமருனின் மெய்க்காப்பாளர் ஒருவர் தனது துப்பாக்கியை ட்ரான்ஸ் அத்திலாந்திக் ஜெட் விமானத்தின் கழிப்பறையில் தவறவிட்டுள்ளார்.
நியூயோர்கிலிருந்து லண்டனுக்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் துப்பாக்கியை கண்டு "பயந்துபோன ஒரு பயணி" அதை விமான ஊழியர்களிடம் கொடுத்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான கெமருனுக்கு லண்டன் பெருநகர பொலிஸாரால் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 மில்லி மீற்றர் க்ளோக் 17 தோட்டாக்களுடன் குறித்த துப்பாக்கி, மெட்ஸின் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் நெருங்கிய பாதுகாப்பு அதிகாரியால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் கழிப்பறையில் இருந்தபோது தனது கைத்துப்பாக்கி வைக்கும் உறையை கழற்றிய போது துப்பாக்கி தவறவிடப்பட்டுள்ளது. கெமருனின் கடவுச்சீட்டு தவறவிடப்பட்ட துப்பாக்கியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விமானத்தில் நடந்த சம்பவத்தையடுத்து குறித்த அதிகாரி கடமையில் இருந்து நீக்கப்பட்டார்.
"நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம், மேலும் விசாரணைகள் நடைபெறுகிறது என இங்கிலாந்து பொலிஸ் அதிகாரியொருவர் தெரவித்துள்ளார்.
கெமருன் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 6 ஆண்டுகளாக இங்கிலாந்தின் பிரதமராக பதவி வகித்தார். ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பின் முடிவைத் தொடர்ந்து அவர் தனது பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment