கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

பிங்கிரிய, கதுருவெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (04) அதிகாலை 12.40 மணியளவில், குறித்த பிரதேசத்தில் வைத்து, நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய, பிங்கிரிய, கதுருவெவவில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை தொடர்பான சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, கொலைக்கான காரணமும் இது வரை அறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment