பிரேசிலில் வைத்தியசாலையொன்றில் பெண் ஒருவர் தனது வயதான தாயின் மூக்கு மற்றும் வாயை மூடி மூச்சுத்திணற வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம்யொன்று வைத்தியசாலையின் சி.சி.ரிவி கமராவில் பதிவாகியதையடுத்து குறித்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் மாநிலமான மரான்ஹாவோவின் சாவ் லூயிஸ் நகரில் அமைந்துள்ள கார்லோஸ் மாகீரா வைத்தியசாலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் சுகயீனம் காரணமாக 68 வயதான குறித்த தாய் வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரை பராமரிப்பதற்காக அவரின் 32 வயது மகள் வைத்தியசாலையில் இருந்த போது தாயின் மூக்கு மற்றும் வாயை மூடி கொலை செய்ய முயன்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மகள் வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வயோதிபப் பெண்ணுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் வைத்து தாயை பராமரிப்பது தமக்கு சிரமாக இருந்தமையால் அவரை கொலை செய்ய முடிவெடுத்ததாக கைது செய்யப்பட்ட பெண் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment