(இராஜதுரை ஹஷான்)
போதைப் பொருள் பாவனையினை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும். நாடு இன்று எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மொரட்டுவ நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு இன்று எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் பொது விடயங்கள் குறித்து நாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும். பௌத்த மக்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும.
இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு சவால் விடுக்கும் விதமாகவே போதைப் பொருள் பாவனை காணப்படுகின்றன. ஹொரனை பிரதேசத்தில் 150 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருள் இளைஞர்களின் பாவனைக்காகவே விநியோகிக்கப்பட்டவிருந்திருக்கும்.
போதைப் பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று இளம் தலைமுறையினர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். பிள்ளைகள் மீது பெற்றோர் தற்போது அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும். நாடு இன்று எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். பௌத்த மக்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment