கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க ரணிலும், மஹிந்தவும் ஒன்றிணைந்துள்ளனர் : காவிந்த ஜயவர்தன எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க ரணிலும், மஹிந்தவும் ஒன்றிணைந்துள்ளனர் : காவிந்த ஜயவர்தன எம்.பி.

(செ.தேன்மொழி) 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தொலைபேசியில் கலந்துரையாடியதன் பின்னர் இந்தியாவிலிருந்து இலவசமாக சுவாசக் கவசங்களை (மாஸ்க்) இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, சீனா - வுஹான் நகரில் பரவிவரும் கொரோனா வைரஸ் உலகலாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

எமது நாட்டிலும் இந்த வைரஸ் தொற்றுதலுக்குள்ளான நோயாளியொருவர் கண்டறியப்பட்டுள்ளதால், இங்கும் அந்த பதற்ற நிலமை தோற்றம் பெற்றுள்ளதுடன் குறித்த பெண் தனது நாட்டவர்களுடன் இணைந்து நாட்டில் பல பகுதிகளில் நடமாடியுள்ளமையும் தெரிய வந்திருக்கின்றது. 

இந்நிலையில் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதவேளை குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி 14 நாட்களுக்கு பின்னரே நோயின் அறிகுறிகளை அவதானிக்க முடியும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர்கள் நாட்டில் இருப்பார்களாயின் அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக சுவாசக் கவசங்களை (மாஸ்க்) அணியுமாறு வைத்தியர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர். இதேவேளை சுவாசக் கவசங்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அதற்கமைய எம் 95 வகை சுவாசக் கவசங்களையே அணிய வேண்டும். அந்த கவசங்களே தரமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதுடன், சுவாசக் கவசங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி அவற்றை இலங்கை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பிரமருக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். 

இதேவேளை இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இலங்கைக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment