பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறது - ஐக்கிய தேசிய கட்சியினரின் பிரச்சினைகளை அவர்களாயே தீர்க்கமுடியவில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறது - ஐக்கிய தேசிய கட்சியினரின் பிரச்சினைகளை அவர்களாயே தீர்க்கமுடியவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறது. இத்தருனத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்பட்டாலும் அக்கட்சி படுதோல்வியடையும் என்பதில் சந்தேகமில்லை என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது சஜித் பிரேமதாச போன்ற தூரநோக்கு சிந்தனையற்ற தலைவரொருவர் ஐக்கிய தேசிய கட்சியின் அண்மைய வரலாற்றில் தோன்றவில்லை. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த மறுகனம் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர்களின் பிரச்சினைகளை அவர்களாயே தீர்க்க இயலவில்லை.

எப்போது தேர்தல் நடந்தாலும் தாம் தோல்வியுறுவோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். மாகாண சபைத் தேர்தலையும் நடத்தவில்லை. அதற்கு முன்னர் பிரதேச சபைத் தேர்தலை நடாத்தினார்கள். அதனையும் உரிய நேரத்தில் நடத்தாது காலம் தாழ்த்தினார்கள். 

தேர்தலை காலம் தாழ்த்துவதன் ஊடாக இதிலிருந்து தப்பித்து விடலாமென நினைத்தார்கள். இறுதியில் என்ன நடந்தது ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக அழிவடைந்ததுடன் அக்கட்சிக்கு கிராமத்தில் காணப்பட்ட ஆதரவு மொட்டின் கரங்களுக்கு கைமாறியது. 

ஐக்கிய தேசிய கட்சியினர் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் முரண்படுகின்றார்கள். கட்சி தலைமைத்துவத்திற்கு முரண்படுகின்றார்கள். 

ஐக்கிய தேசிய கட்சி இரண்டு மூன்று துண்டுகளாக பிளவடைந்துள்ளது. பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகவுள்ள கட்சியென்பதால் எச்சந்தர்பத்திலும் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என அவர் தெரவித்தார்.

No comments:

Post a Comment