எனக்கு எதிராக மீண்டும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி என்னையும் சிறைச்சாலையில் அடைப்பார்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

எனக்கு எதிராக மீண்டும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி என்னையும் சிறைச்சாலையில் அடைப்பார்கள்

இனவெறி பிடித்த, மதவெறி பிடித்த, கொலை வெறி பிடித்த அரசே ராஜபக்ச குடும்ப அரசு. இவர்கள் எனக்கு எதிராக மீண்டும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி என்னையும் சிறைச்சாலையில் அடைப்பார்கள்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது “ராஜபக்ச குடும்ப அரசு ஜனநாயகத் தெரிவின் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால், இந்த அரசு பழைய பாணியிலேயே மீண்டும் செயற்படுகின்றது. 

நாட்டு மக்களின் ஜனநாயக ஆணையை உதாசீனம் செய்யும் வகையில் செயற்படுகின்றது. சர்வதேசத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றது.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்களைக் குறிவைத்து அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் அரங்கேற்றி வருகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த அரசின் அராஜக நடவடிக்கைகளுக்குப் பதிலடி வழங்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – என்றார்.

No comments:

Post a Comment