வட்டி இல்லா மாணவர் கடன் திட்ட முறையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2020

வட்டி இல்லா மாணவர் கடன் திட்ட முறையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை

அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வட்டி இன்றி வழங்கப்படும் மாணவர் கடன் பரிந்துரை முறையில் பிரவேசிப்பதற்கு உள்ள சந்தர்ப்பத்தை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக வட்டி அற்ற மாணவர் கடன் பரிந்துரை முறை ஒன்று தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் அதற்காக எதிர்பார்த்த வகையில் மாணவர்களை கவருவதற்கு முடியாதுள்ளது.

விசேடமாக இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கை நெறிக்காக தொழில் வாய்ப்பு சந்தையில் போதுமான கோரிக்கைகள் இல்லாமை மற்றும் அதில் பட்டப்படிப்பு கற்கை நெறியின் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு போதுமான பங்களிப்பு இல்லாமையினால் இதன் கடன் பரிந்துரை முறையை மிகவும் பயனுள்ள வகையில் மீண்டும் வகுக்க வேண்டியுள்ளது. 

இதற்கு அமைவாக சுபீட்சமிக்க தொலைநோக்கு என்ற புதிய 5 வருட அபிவிருத்தி மூலோபாய கொள்கைக்கு அமைவாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் நிலவும் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்திற்காக தொழில்நுட்ப அறிவைக் கொண்ட 10,000 பட்டதாரிகளை உருவாக்கக் கூடிய வகையில் சம்பந்தப்பட்ட வட்டி இல்லா மாணவர் கடன் திட்ட முறையை மேலும் விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்துவதற்காக உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment