(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் ஒத்திவைக்கப்பட்டது.
அந்த வகையில் எட்டாவது பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டுவந்து ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படலாம் என கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்தபோதும் பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில் மீண்டும் எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் கெள்கை விளக்க உரையை தொடர்ந்து சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைத்து பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் சபை கூடியது.
பிற்பகல் 1 மணிக்கு சபையை கூட்டுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 1 மணியளவில் சபை கூடியபோது புதிய எம்.பியொருவரின் பதவியேற்பின் பின்னர் எதிர்க்கட்சி தலைவர், சபை முதல்வர், ஆளும் கட்சி பிரதம கொரடா மற்றும் எதிர்க்கட்சி கொரடா ஆகிய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான சபாநாயகரின் அறிவித்தலின் பின்னர் பாராளுமன்றத்தை எதிர்வரும் 7ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரையில் ஒத்தி வைப்பதாக சபை முதல்வர் அறிவித்தார்.
No comments:
Post a Comment