அறுவைக்காடு குப்பை சுத்திகரிப்பு செயற்திட்டத்துக்கு அவசியமான நான்கு பவர் செட் ரயில் எஞ்ஜின்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
களனி சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடையும் வரையில் அவை ரயில்வே திணைக்களத்தில் வைக்கப்படவுள்ளதாக மேல் மாகாண திண்மக் கழிவுகள் முகாமைத்துவ செயற்திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர் சரத் பண்டார தெரிவித்தார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நான்கு பவர் செட் ரயில் எஞ்ஜின்களினதும் மொத்த பெறுமதி 8.8 மில்லியன் அமெரிக்க டொலர்களென்றும் இதற்கான செலவீனத்தை அரசாங்கமே பொறுப்பேற்றுள்ளதென்றும் அவர் கூறினார்.
மேலும் குப்பைகளை அறுவாக்காடு நோக்கி எடுத்துச் செல்வதற்காக வாகனங்கள் தேவைப்படுவதாகவும் அதற்காக விலைமனுகோரல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிக மழை காரணமாகவே களனி கட்டுமானப் பணிகள் தாமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment