வட மாகாண மக்களின் அடிப்படை தேவையான சகல விதமான விடயங்களிலும் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை ஜனாதிபதி, மற்றும் ஜனாதிபதி செயலகம் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வட மாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (02) யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சொந்த மாவட்டத்தில் சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை ஆனாலும் நிர்வாக சேவையினை முடித்ததும்தான் சேவை ஆற்றுகின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
நீங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் அனைத்து ஜனாதிபதி செயலகத்துடன் கலந்துரையாடி அதற்கான திட்டங்களை முடிந்து வைப்பதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.
வட மாகாண தமிழ் மக்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் ஒரு இணைப்பு பாலமாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் செயற்படும். இதில் பெரும்பான்மை அரச அதிகாரிகளின் எதிர்ப்பார்ப்பு பின்தங்கிய வடமாகாண மக்களுக்கு ஏதாவது செய்து முடிக்க வேண்டும் என்பதே.
பல்வேறு அழுத்தங்களுக்கு அப்பால் விமர்சனங்களுக்கு அப்பால் முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் .
உங்களில் இருக்கின்ற அழுத்தங்கள், இறுக்கங்கள் எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு இதய சுத்தியுடன் மனசாட்சியுடன் ஒன்றிணைய வேண்டும் குறைகள் இருந்தால் குறைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டுகின்றவர்களாக என்னுடன் இணைய வேண்டும்.
நான் இங்கு வந்திருப்பது யாரையும் குறை சொல்லுவதற்காகவும் இல்லை யாரை மாற்றவும் இல்லை. வடமாகாணத்திற்கு சேவை ஆற்றுவதற்காகத்தான் வந்துள்ளேன்.
30 வருடங்களில் பலவற்றினை இழந்து விட்டோம் அதனையும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். கடந்த காலத்தில் அடையாத பல விடயங்களை தான் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தினைத்தான் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார் என்றார்.
யாழ். நிருபர் ரமணன்
No comments:
Post a Comment