கொட்டவெஹெர பகுதியில் சிறுமி ஒருவரை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கிராமா சேவகர் உட்பட இரண்டு பெண்களுக்கு இன்று (30.01.2020) முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தை அடையாளம் காணப்பட்ட, ஜமால்தீன் அப்துல் முகமது ரோஷான் விளக்கமறியில் வைக்கப்பட்டு நிக்கவரெட்டிய நீதவான் லக்மாலி தஸ்நாயக்கவால் தலா ரூபா. 100,000 என்ற இரண்டு சரீர பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலிலுள்ளவர்கள் ஆர்.எம். நில்மினி ரத்னகுமாரி (கிராம சேவகர்) மற்றும் அவரது சகோதரி மற்றும் சிறிய தாய் மானெல் ரத்ன குமாரி ஆகியோராவர்.
13 வயது சிறுமி பாரதூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளிக்கொண்டுவரப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுமி தாக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் நிக்கவெரட்டிய மற்றும் கொட்டவெஹெர பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பொறுப்பதிகாரிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.
இதேவேளை, தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, சிறிய தாய் மற்றும் சிறிய தாயின் சகோதரி ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment