சபை முதல்வர், ஆளும் கட்சி பிரதம கொரடா ஆகியோர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2020

சபை முதல்வர், ஆளும் கட்சி பிரதம கொரடா ஆகியோர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் தலைமையில் கூடிய வேளையில் சபாநாயகர் மூலமாக உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டு சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் ஆளும் கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டனர்.

சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை சபை முதல்வர் அலுவலகப் பணியாளர்களால் வரவேற்கப்பட்டதுடன், அவர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை அவருடைய அலுவலகப் பணியாளர்கள் அவரை வரவேற்றதுடன், உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பொறுப்புக்களை அவர் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வுகளில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment