ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சபாயநாயகர் கருஜயசூரியவினால் இன்றையதினம் (03) இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான அவர், தேர்தல் தோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஏற்கனவே அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பெயரிடப்பட்டதற்கு அமைய, வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபை முதல்வராகவும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவும் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சபாநாயகர் இதனை அறிவித்தார்.
No comments:
Post a Comment