ஒரு மணித்தியாலத்தில் 3000 அங்கத்துவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் இணைவு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

ஒரு மணித்தியாலத்தில் 3000 அங்கத்துவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் இணைவு

பாறுக் ஷிஹான்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டசியின் 51 கிராம சேவகர் பிரிவிற்கான இணைப்பாளர்கள், அங்கத்துவர்களை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன் இன் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளருமான வை.எம் முஸம்மில் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன பிரதான அமைப்பாளரும், வனவிலங்கு வன பாதுகாப்பு இராஜங்க அமைச்சருமான விமல் வீர திஸ்ஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் வண்டிக்கார சங்கம், விவசாய அமைப்பு, இளைஞர் அமைப்பு, மகளிர் அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன் ஒரு மணித்தியாலத்தில் 3000 அங்கத்துவர்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment