தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சினை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது எனத் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment