இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மற்றும் உலக யுத்தத்தில் உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரை நினைவுகூரும் முகமாக வருடாந்தம் நடத்தப்படும் பொப்பி தின நிகழ்வை முன்னிட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு நேற்று (01) நடைபெற்றது.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பாதுகாப்புப் படையினர் நினைவுதினத்தின் தலைவர் ரியர் அட்மிரல் டொக்டர் ஷெமால் பெர்னான்டோ, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு பொப்பி மலரை அணிவித்தார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர், முன்னாள் பாதுகாப்புப் படைவீரர் என்ற ரீதியில் இது தனக்கு விசேடமானதொரு தருணம் என்றார். நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு உயிர்களை அர்ப்பணித்த சகல படை வீரர்களையும் நினைவுகூர்ந்தார்.
அத்துடன், மத, அரசியல் பேதமின்றி செயற்படும் பாதுகாப்புப் படையினர் தாய்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளை மாத்திரமே கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment