யாழ்ப்பாணம் சென்று ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்ற முடிந்த கோட்டாபயவுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்துக்கு சென்று லலித் மற்றும் குகன் காணாமற்போனது பற்றி கூறமுடியாது போனதென்று முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குனகரத்தினம் தெரிவித்தார்.
பிலியந்தலையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், செப்டம்பர் 27 ஆம் திகதி கோட்டாபய யாழ்ப்பாண நீதிமன்றத்துக்கு வருமாறு கூறியபோது வரவில்லை. எமது கட்சியின் லலித், குகன் ஆகியோர் 2012 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி காணாமற் போனமை தொடர்பாக சாட்சி கூற அழைக்கப்பட்டார்.
அவர்கள் இருவரும் காணாமற் போனது அவர்களது ஆட்சிக் காலத்திலாகும். ஆனால் பல கதைகளை கூறி வருவதை தவிர்த்தார்.
ஆனால் பதவிக்காக, தேர்தலுக்காக யாழ்ப்பாணத்துக்கு சென்று நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்வது பற்றி பேசுகின்றார்.
செல்வந்த நிர்வாக வகுப்பின் கனவான்கள் ஜனநாயகம், தேசிய பாதுகாப்பு பற்றி ஒழுக்கம் பற்றி கூறும் கதைகளை ஏற்றுக் கொள்ள நாம் தயாரில்லை. இவர்களின் பொய் ஜோடனைகளுக்கு மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க இடமளிக்க முடியாது.
No comments:
Post a Comment