சாய்ந்தமருதூர் எம்.எம்.காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ நூலின் வெளியீட்டு விழா - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

சாய்ந்தமருதூர் எம்.எம்.காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ நூலின் வெளியீட்டு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும் குடாக்கரை நிழல் கண்ட விவசாயிகளின் முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம்.காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ வரலாற்று நூலின் வெளியீட்டு விழா இன்று (01) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு மாளிகைக்காடு பாவா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது விவசாய சேவைகள் குழுவின் தவிசாளர் எம்.எம்.எம். ஜெமீல் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம், கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், அம்பாறை மாவட்ட கமநல அபிவிருத்தி காரியாலயத்தின் உதவி ஆணையாளர் ஐ.ஜீ.ஷாமினி சோமதாஸ ஆகியோர் கௌரவ அதிதிகளாக் கலந்து கொள்வதோடு, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். றிகாஸ், கல்முனை பிராந்திய நீர்ப்பாசன காரியாலயத்தின் பொறியியலாளர் ஜீ.ராஜ்குமார், சாய்ந்தமருது கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.சம்சுதீன், அம்பாறை மாவட்ட முன்னாள் விவசாயப் பணிப்பாளர் ஏ.ஆர். அப்துல் லத்தீப், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.

குடாக்கரை நிழல் கண்ட விவசாயிகள் அமைப்பு மற்றும் எம்.எம். காஸிம் வெளியீட்டம் ஆகியன ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில், எவரும் கலந்து கொள்ளலாம் என அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment