சஜிதின் வாங்கு வங்கியில் சரிவை ஏற்படுத்த பல்வேறு உபாயங்களும், யுத்திகளும் மொட்டு அணியினரினால் முன்னெடுப்பு - மன்சூர் எம்.பி. குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2019

சஜிதின் வாங்கு வங்கியில் சரிவை ஏற்படுத்த பல்வேறு உபாயங்களும், யுத்திகளும் மொட்டு அணியினரினால் முன்னெடுப்பு - மன்சூர் எம்.பி. குற்றச்சாட்டு

சஜித் பிரேமதாசவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்த கோத்தபாய ராஜபக்‌ஷவின் மொட்டு அணியினர் இன்று வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல்வேறு உபாயங்களும், யுத்திகளும் கையாளப்படுகின்றன. இதனை முறியடித்து சகல இனங்களையும் அரவணைத்துச் சௌபாக்கியமான வாழ்வுக்காக சஜித் பிரேமதாசவின் வெற்றியயை உறுதி செய்ய வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புதிய ஜனநாய முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

புதிய ஜனநாய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் அலுவலகம் சம்மாந்துறையில் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (31) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை உடைப்பதற்காக பசில் ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கு அமைவாகவே ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளார். ஹிஸ்புல்லா எப்போதும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் விசுவாசியாகும். அவரின் நோக்கம் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒன்றைப் பெற்றுக் கொள்வதாகும் வேறொன்றும் கிடையாது. இவரின் பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது. இவருக்கு அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் கோத்தபாயவை வெற்றி பெற வைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மற்றும் கோத்தபாயவினால் கொழும்பிலிருந்து கிழக்குக்கு இறக்கப்பட்ட குழுவினரினால் கோத்தபாயவுக்கு வாக்களிக்காவிடின் முஸ்லிம் சமூகம் வன்முறைகளுக்கு இலக்காக நேரிடும் என மக்ளுக்கு பயத்தினை விதைத்து, முஸ்லிம் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி வாக்குகளை சூரையாட முயற்சிக்கின்றனர். இதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
இதுபோன்ற குழுவினர் கோத்தபாயவின் பணத்திற்காகவும், அமைப்பாளர் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் ஆசைப்பட்டு சம்மாந்துறை பிரதேசத்தில் சஜிதின் வாக்குகளை சூரையாட கிராமப்புறங்களில் களமிறங்கியுள்ளனர். இவர்களின் விடயங்களில் சம்மாந்துறை மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளை ஒன்றுதிரட்டி, சிறுபான்மை இன மக்களின் சிதறடிக்கச் செய்வதே மொட்டு அணியினரின் ஓரே நோக்கமாகும். அவர்களின் இனவாத நாடகம் ஒருபோதும் வெற்றி பெற இடமளிக்கக் கூடாது.

எனவே, இத்தேர்தல் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகும். இனவாதப் பிரசாரத்தை மக்கள் மத்தியில் விதைத்து வெற்றி பெறுவதற்கு துடிக்கின்ற மொட்டு அணியை மக்கள் புறக்கணிக்க வேண்டுவதுடன், சகல இனங்களையும் அரவணைத்துச் சௌபாக்கியமான வாழ்வுக்காக சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் அவரின் வெற்றியினை உறுதிப்படுத்த பாடுபட வேண்டும். என்றார்.

இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் மன்சூர் ஏ காதர், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment