அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை இன்றுடன் (29) முடிவடைகின்றது.
இதற்கமைய 2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (02) ஆரம்பமாகவுள்ளது. 4,987 பரீட்சை நிலையங்களில் சுமார் 717,000 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
No comments:
Post a Comment