நேற்றையதினம் (01) இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பின் போது, தங்களது வாக்குச்சீட்டுகளை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவை, கட்டுகஸ்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, கம்பளை, மாகாண கல்விப் பணிமனையில் இடம்பெற்ற தபால் வாக்களிப்பின்போது, தனது வாக்கை அடையாளமிட்டதன் பின்னர் புகைப்படம் எடுக்க முயற்சித்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (01) மற்றுமொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கம்பளை, குருந்துவத்தையைச் சேர்ந்த பாடசாலையின் காவலாளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதோடு, அவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவ்வாறு தாங்கள் அளித்த வாக்குச்சீட்டை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஒரு சிலர் தொடர்பிலும், அதனை பகிர்ந்த நபர்கள் தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த இரு விடயங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் சட்ட திட்டங்களுக்கு அமைய தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment