சீனாவின் போதைப் பொருள் கண்டறியும் ரோபோ பணியில் - இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பிரிவில் ரோபோக்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2019

சீனாவின் போதைப் பொருள் கண்டறியும் ரோபோ பணியில் - இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பிரிவில் ரோபோக்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் முனையத்தில் வெடிபொருட்கள் மற்றும் அனைத்து வகையான போதைப் பொருட்களையும் கண்டறியும் இரண்டு ரோபோக்கள் நிறுவப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள் மற்றும் வெடிப் பொருட்களை கண்டறியக்கூடிய அதிநவீன ரோபோக்கள் உள்ளிட்ட ரூபா 750 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை, சீனா அரசு கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு அன்பளிப்பு செய்திருந்தது.

சீனத் தூதுவர் Chang Xueyuan ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய இந்த அதிநவீன உபகரணம் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டதுடன், இத்தகைய நவீன உபகரணங்களை போதைப் பொருள் தேடுதல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை பாதுகாப்புத் துறையினர் உபயோகிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

05 மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் நபர்கள் அல்லது பொருட்களுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களை தன்னிச்சையாக இனங்கண்டு கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட விசேட ரோபோ இயந்திரங்கள் மூன்றும் இதற்குள் உள்ளடங்குகின்றன. இந்த ஒரு இயந்திரத்தின் பெறுமதி 85.5 மில்லியன் ரூபாவாகும்.

No comments:

Post a Comment