அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் மற்றும் SOFA, ACSA உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் முதலாவது பிரதிவாதியாக சட்ட மா அதிபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், வௌிவிவகார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி குறித்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரினதும் அடிப்படை உரிமையை மீறும் செயல் என சட்டத்தரணி தமது மனுவில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
No comments:
Post a Comment