வாழைச்சேனை அல் ஹிக்கமத் கல்வி நிறுவனத்தினால் கௌரவிப்பும், பரிசளிப்பும், நூல் வெளியீடும் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

வாழைச்சேனை அல் ஹிக்கமத் கல்வி நிறுவனத்தினால் கௌரவிப்பும், பரிசளிப்பும், நூல் வெளியீடும்

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா தொகுதியிலுள்ள சமூக முன்னோடிகள் கௌரவிப்பும், கல்குடா முஸ்லிம் பிரதேச சமூக முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகள் உள்ளடங்கிய நூல் வெளியீடும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.

வாழைச்சேனை அல் ஹிக்கமத் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அந்நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.முகைதீன் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கல்விப்பணிக்காக தங்களுடைய காலங்களை அர்ப்பணித்த கல்வியலாளர்களான கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி மற்றும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு இந்நிகழ்வில் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி மற்றும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட், அந்நூர் பாடசாலை அதிபர் ஏ.எம்.தாஹீர், மீராவோடை வைத்தியசாலையின் வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கலைகலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment