சந்திரிகாவின் திடீர் வருகை சஜித்துக்குப் பலம் சேர்க்கும் - ரணில் நம்பிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, November 2, 2019

சந்திரிகாவின் திடீர் வருகை சஜித்துக்குப் பலம் சேர்க்கும் - ரணில் நம்பிக்கை

“எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆதரவு வழங்கியுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். எமது அணிக்குள் சந்திரிகாவின் திடீர் வருகை சஜித்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே ரணில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2015ஆம் ஆண்டிலும் எம்முடன் கரம் கோர்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார் சந்திரிகா. அதேபோல் இவ்வருடமும் எம்முடன் கரம் கோர்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயல்வோருக்குப் பாடம் புகட்ட சந்திரிகா தயாராகிவிட்டார்” – என்றார்.

No comments:

Post a Comment