இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நடவடிக்கை தொடர்பான ஆறாவது மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்தினூடாக இலங்கைக்கு இதுவரை 1.31 அமெரிக்க டொலர் நிதி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் தற்போது வழமைக்கு திரும்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் Nishu Hiro Furusawan அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் 2.7 வீதமாகக் காணப்படும் பொருளாதார வேகம் 2020 ஆம் ஆண்டில் 3.5 வீதமாக அதிகரிக்கக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது.
No comments:
Post a Comment