புலமைப்பரிசில் உதவி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

புலமைப்பரிசில் உதவி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சரவை அங்கீகாரம்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் தொகை பெறும் மாணவர்கள் தொகையை மேலும் 5000 மாணவர்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. புலமைப் பரிசில் வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 11 வருடங்களுக்கு பின்னரே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 15,000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படுவதோடு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய புலமைப் பரிசில் வழங்கும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000 வரை அதிகரிக்க அனுமதி கிடைத்துள்ளது. 

அதன்படி தரம் 6 தொடக்கம் 13 தரம் வரை கல்வி பயிலும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு இது உதவுகின்றது. 

புலமைப் பரிசில் வழங்கப்படும் 20,000 மாணவர்களில் 250 மாணவர்கள் விசேட தேவையுடையவர்களாவர். புலமைப் பரிசு எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன் புலமைப் பரிசில் உதவி தொகை 500 ரூபாவிலிருந்து 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

2019 ஜனவரி மாதம் தொடக்கம் அதிகரித்த தொகை வழங்கப்பட 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் பெற்றோரின் மாதாந்த வருமானம் 4500 ரூபாவாகவுள்ள மாணவர்களுக்கே புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. ஆனால் 11.09.2019 கிடைத்த அமைச்சரவையின் அங்கீகாரத்தின் படி மாதாந்த வருமானம் 15,000 ரூபா திருத்தப்பட்டுள்ளது. 

அதேபோல் 2019 ஆம் வருடத்தின் பின்னர் புலமைப் பரிசில் வழங்க பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் வருமான எல்லையை தீர்மானிக்கும் அதிகாரம் கல்விப் பணிப்பாளர்களுக்கு அமைச்சரவைப் பத்திரம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment