இலங்கையில் மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 5, 2019

இலங்கையில் மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் வருடமொன்றில் 3000 தொடக்கம் 3500 இக்கு இடைப்பட்ட புதிய மார்பகப் புற்று நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 25 வருடங்களில் அடையாளம் காணப்பட்ட மார்பகப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 3165 பேர் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்பகப் புற்று நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது அதனை முற்றாக நிவர்த்திக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

20 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் மார்பகப் புற்று நோய் தொடர்பில் ஆரம்பகட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment