பத்திரிகையில் வெளியாகிய செய்தி தொடர்பாக அச்செய்தியை எழுதிய செய்தியாளர் நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
வீரகேசரி பத்திரிக்கையின் யாழ். அலுவலக நிருபர் தி.சோபிதனே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவ் விசாரணை 2 1/2 மணி நேரம் இடம்பெற்றது.
கோட்டாபய ராஜபக்சேவுடன் டக்ளஸ், வரதர் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தி அறிக்கையிடலுக்காகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதேவேளை இச்செய்தியாளர் விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத நிலையில் விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றி தருமாறு பொலிஸ் தலைமையகத்தை கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்
No comments:
Post a Comment