ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 39 ரூபாவினால் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்க விவசாய அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹரிஸன் தெரிவித்தார்.
வாழ்க்கை செலவுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை காலம் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோ கிராமிற்கு 40 ரூபா வரி அறவிடப்பட்டது.
இதேவேளை, தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரிய வெங்காய மொத்த விற்பனை விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக செய்தியாளர் குறிப்பிட்டார். அதற்கமைய, ஒரு கிலோ கிராம் வெங்காயம் 280 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
10 வருடங்களின் பின்னர் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் மிக அதிகமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.
No comments:
Post a Comment