எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அரச அடையாளப் பத்திரங்கள் இல்லாதவர்களை பதிவுசெய்து அவர்களுக்கு தற்காலிகமாக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தற்காலிகமாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பப்படிவங்களை கிராம சேவகர் அலுவலகங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை துரிதமாக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடையாள அட்டை இல்லாதவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment