தேசிய அரசியலில் இணைந்து எமது பயணத்தை கோட்டாவுடன் ஆரம்பிப்போம் - முன்னாள் உயர் கல்வி பிரதி யமைச்சர் மயோன் முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Saturday, October 5, 2019

தேசிய அரசியலில் இணைந்து எமது பயணத்தை கோட்டாவுடன் ஆரம்பிப்போம் - முன்னாள் உயர் கல்வி பிரதி யமைச்சர் மயோன் முஸ்தபா

தேசிய அரசியலில் இணைந்து எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும், கோட்டாவை ஆதரிப்பதனால் தான் இனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க முடியும் என முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் சமகால விடயங்கள் தொடர்பாகவும் வெள்ளிக்கிழமை (4) மாலை 5 மணியளவில் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.எம்.முஸ்தபாவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடும் மக்கள் சந்திப்பும் கல்முனை வரவேற்பு மண்டபம் ஒன்றில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில், எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற இருக்கிற ஜனாதிபதித் தேர்தல் வரலாற்று முக்கியத்துவமானது. கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க சேவைகளை என்னால் செய்ய முடிந்தது அது மஹிந்த ராஜபக்ஷ அரசின் ஆட்சியிலேயாகும். அவரோடு இணைந்து பயணிக்க தற்போது முடிவு செய்துள்ளேன். காரணம் கோத்தபாய ராஜபக்ஷவை சிங்கள மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள். அந்த வெற்றியில் நாமும் பங்காளராவோம். 

இனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லீம் பங்காளி கட்சிகளின் நிலை பற்றி கூறும் போது எதுவித ஒப்பந்தங்களும் இல்லாமல் தமது ஆதரவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவிற்கு வழங்குவதென்பது முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாது தமது சுயலாபத்தை உறுதிப்படுத்துவதாக இருப்பது அனைத்து மக்களும் அறிவார்கள். இவ்வாறு இறுதி நேரத்தில் ஒட்டிக்கொண்டவர்கள் அவர்கள். 

2015 இல் அரசில் இருந்து கொண்டு அம்மக்கள் ஆதரவினால் வந்தவர்கள் கடந்த அரசில் பல்வேறு சலுகைகளை மக்களை மறந்து அனுபவித்தார்கள்.

எனவே தான் முஸ்லிம் கட்சிகள் என கூறி கொள்பவர்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு எந்த அடிப்படையில் ஆதரவு தெரிவித்தனர் என்பது கேள்விக்குறியாக்கியுள்ளது. தற்போது தனித்துவ அரசியல் நிலை என்பது மாறியுள்ளது. எமது முஸ்லிம் அரசியல் கட்சிக்கள் இதனை பற்றி சிந்திக்க தவறி விட்டனர். நாட்டின் பொருளாதார விடயங்களை கட்டியெழுப்ப வேண்டும். இதற்கான சிறந்த தகுதியான தலைவரை நாம் தேட வேண்டும். ஓர் திடமான அரசியல் தலைவர் வேண்டும்.

எமது சமூகத்தின் நாசகார சக்திகள் கலையப்பட வேண்டும் மீண்டும் தேசிய கட்சில் இருந்து கொண்டு எமது அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசியலில் இணைந்து எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment