சஜித்தின் விஞ்ஞாபனத்தில் மலையகத்திற்கான 10 அம்சக் கோரிக்கைகள் உள்ளீர்ப்பு - அமைச்சர் மனோ தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

சஜித்தின் விஞ்ஞாபனத்தில் மலையகத்திற்கான 10 அம்சக் கோரிக்கைகள் உள்ளீர்ப்பு - அமைச்சர் மனோ தெரிவிப்பு

மலையகத்திற்கென முன்வைக்கப்பட்ட பத்து அம்சக் கோரிக்கைகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தமிழ் விவசாயிகளின் நிலையான வருமானத்துக்கு உத்தரவாதமளிக்க அவுட் - க்ரோவர் திட்டம். குறித்து தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த பொறிமுறை. தோட்டப் பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள். 7 பேர்ச் காணியுடன் தனி வீடுகள். நியாயமான மற்றும் சமமான சம்பள அதிகரிப்பு. 

பெருந்தோட்ட சுகாதாரமானது ஏனைய பகுதிகளை போன்று தரமுயர்த்தப்படும். உயர் கல்வியை மேம்படுத்த ஹைலேண்ட் பல்கலைக்கழகம் திறக்கப்படும். நாடு முழுவதும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான விசேட செயற்றிட்டம். மலையக இளைஞர்களுக்கான தொழில்பயிற்சியை உறுதிப்படுத்தல். 

உள்ளிட்டவை மலையக மக்களுக்கான உறுதி மொழிகளாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment