நாவிதன்வெளியில் சோதனை சாவடி - சாய்ந்தமருதில் இராணுவத்தினர் தேடுதல் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

நாவிதன்வெளியில் சோதனை சாவடி - சாய்ந்தமருதில் இராணுவத்தினர் தேடுதல்

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று பாரிய தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

இன்று (30) மதியம் திடீரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 இற்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையானது சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகள், மையவாடியை அண்டிய பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் வீதியால் சென்ற பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறும் இராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இராணுவத்தினரால் தொடர் தேடுதல்கள் நடவடிக்ககைள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment