பாணின் விலையை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 450 கிராம் நிறை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பாணின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment