தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் நியாயமற்ற வேலைநிறுத்தங்களுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்ட முடிவு - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் நியாயமற்ற வேலைநிறுத்தங்களுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்ட முடிவு

தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் நியாயமற்ற வேலைநிறுத்தங்களுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்ட அமைச்சரவை முடிவு செய்துள்ளது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் 84வது வருடாந்த கூட்டத்தில் பங்குபற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழிற்சங்க தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடிவு செய்யப்பட்டதோடு, அந்த சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள நிர்வாக சேவைகள் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. 

எவ்வாறாயின் அந்த ஊதிய உயர்வை பெற்றுக்கொள்ள செயலாளர்கள் ஒப்புதல் அளித்தமையால் இந்த சம்பள முரண்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் சில தரங்களுக்கு நூற்றுக்கு 2000, 3000 என சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்துள்ள வேளையில் தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளும் வேலை நிறுத்தம் அரசியல் ரீதியாக அரசை சிரமத்துக்கு உள்ளாக்க திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

நிதியமைச்சில் கூட்டப்படவுள்ள அமைச்சரவை உப செயற்குழு சபை இந்த வேலை திறுத்தம் தொடர்பாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் “தொழில் ரீதியாக உங்களின் பெற்றுக்கொடுக்கக் கூடிய வேண்டுகோள்களை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

ரனுக்கேயின் அறிக்கைக்கு சம்பள ஆணைக்குழுவை நியமித்தோம். அந்த ஆணைக்குழுவின அறிக்கையை தற்போது செயற்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதன்படி 3000 ரூபா தொடக்கம் 5000 ரூபாவரை அதிகரிக்கும். இந்த அரசாங்கம் எந்தவொரு அரசாங்கமும் கொடுக்காத அளவு அரச சேவை ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கூறினார்.

No comments:

Post a Comment