டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது சர்வதேச கிரிக்கெட் சபை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது சர்வதேச கிரிக்கெட் சபை

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள பந்து வீச்சாளர்களின் விபரங்களை பார்க்கலாம். இந்த பட்டியலில், அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ், 6 புள்ளிகள் குறைந்து 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

தென்னாபிரிக்காவின் கார்கிஸோ ரபாடா, 851 புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, நான்கு இடங்கள் முன்னேறி 835 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் ஜேஸன் ஹோல்டர் ஏழு இடங்கள் முன்னேறி 814 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் எண்டர்சன் ஒரு இடம் சரிந்து 814 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்காவின் வெர்னொன் பிளெண்டர், இரண்டு இடங்கள் சரிந்து 813 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். 

நியூஸிலாந்தின் ட்ரென்ட் போல்ட், இரண்டு இடங்கள் சரிந்து 795 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்தின் நெய்ல் வாக்னர், இரண்டு இடங்கள் சரிந்து 785 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் கெமார் ரோச் ஒரு இடம் சரிந்து 780 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தானின் மொஹமட் அப்பாஸ், ஒரு இடம் சரிந்து 770 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார் .

No comments:

Post a Comment