சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

சம்பள உயர்வு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் பணி பகிஷ்கரிப்பில் 21 வது நாளான இன்று (30 ) திங்கள்கிழமை காலை 10:30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன்போது சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2500 ரூபாய் சம்பள உயர்வு ஏனைய அரசாங்க ஊழியருக்கு வழங்கப்பட்ட போதும் கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவதேன் கோசம் எழுப்பினர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தலைவர் மொகமட் நௌபர் தெரிவிக்கையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் அரசியல்வாதிகள் வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்டில்) தெரிவித்த ஊதிய உயர்வை பெற்றுத்தர தயங்குகின்றனர். ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள உயர்வை அரசாங்கம் எமக்கு பெற்றுத்தர தர மறுப்பதேன் என்ற கேள்வியை எழுப்பினார் .
நாடாவியரீதியில் இடம்பெற்று வரும் பல்கலைக்கழக 27 பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எமது தென்கிழக்கு பல்கலை கழகமும் இணைந்து இன்று 21 வது நாளை கடந்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுட்டு வருகின்றோம் .

எமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்த்த தரும் வரை எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேட்பாளர்கள் தொடர்பிலே கவனம் செலுத்துகின்றனர். நாட்டில் பல பாகங்களிலும் அரச ஊழியர்களது சம்பள உயர்வு சம்பந்தப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களது பணிபகிஷ்கரிப்பு போராட்டம் சம்பந்தமாக உயர்கல்வி அமைச்சருக்கு தெரியப் படுத்திய போதும் அது தொடர்பில் எதுவித முடிவு எட்டப்படாத நிலை ஏமாற்றத்தை தருவதாக உள்ளது என கல்விசாரா ஊழியர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த தொடர் போராட்டங்களால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் இவற்றை அரசும் உரிய அதிகாரிகளும் கவனத்தில் எடுத்து விரைந்து எமது போராட்டத்திற்கான தீர்வினை பெற்றுத்தர உயர்கல்வி அமைச்சினை வலியுறுத்துகின்றோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment