வட மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ, நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக கே.தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கே.தெய்வேந்திரம் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
No comments:
Post a Comment