கம்பளையில் இருந்து அக்கரபத்தனை வரை பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 இளைஞர்கள் காயமடைந்து நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டிய, தலவாக்கலை பிரதான வீதியின் 8 ஆம் கட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.00 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால், முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் 20 முதல் 25 வயதுகளுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment